பால்சர்க்கரை ஒவ்வாமை (LI) உலகளவிலும், பால் உற்பத்தி நாடு என்று பெயர் பெற்ற இந்தியாவிலும் மிகப் பொதுவாகக் காணப்படுகிறது. இந்தியர்களில் மூன்றில் ஒரு பாகத்தை விட அதிகமானோரிடம் லாக்டேஸ் குறைபாடு உள்ளது.
வயிற்று குடலில் லாக்டேஸ் எனப்படும் ஓர் என்ஜைம் போதுமான அளவில் இல்லாத காரணத்தால் பால்சர்க்கரை எனப்படும் லாக்டோஸ் செரிமானம் ஆவதில்லை. லாக்டேஸ் குறைபாட்டினால் லாக்டோஸ் செரிமானம் ஆகாமல் லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகளான வயிற்று வலி, உப்புசம், வயிற்றுப் பொருமல், வாயு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பல வயிறு மற்றும் குடல் சம்பந்தமான (GI) பிரச்சனைகள் உருவாக ஆரம்பிக்கின்றன.
சில சமயங்களில், வழக்கமான பால் தயாரிப்புப் பதார்த்தங்களுடன், சமைக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் மற்றும் பானங்களிலும் மறைந்திருக்கும் பால் பொருள்கள் காணப்படுவதால், லாக்டோஸ் ஒவ்வாமை (LI) அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இந்த லாக்டோஸ் ஒவ்வமையை எதிர்த்து இயற்கை வழியில் பாதுகாப்பான முறையில் சமாளிக்க இந்தியாவில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும் யாமூ மாத்திரைகள் (வாயில் சுவைக்கக்கூடிய லாக்டேஸ் என்ஜைம் மாத்திரைகள்) லாக்டேஸை சிதைத்து லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
லாக்டேஸ் என்ஜைம் மாத்திரைகள்
லாக்டேஸ் என்ஜைம் மாத்திரைகள் ஒரு துணை உணவுப் பொருளாக செயல்பட்டு பால் பதார்த்தங்கள் எளிதாக செரிமானமாவதற்கு உதவும். பாலிலுள்ள முக்கிய சர்க்கரையான லாக்டோஸ் சிதைவுக்கு உதவும் லாக்டேஸ் என்ஜைம் மாத்திரையில் உள்ள லாஸ்டேஸ் என்ஜைம் , அஸ்பர்கில்லஸ் ஒரைசே என்ற பூஞ்சையிலிருந்து பெறப்பட்டுள்ளது
சேர்மானம்: ஒவ்வொரு யாமூ மாத்திரையிலலும் உள்ளவை: லாக்டேஸ்: 4500 எஃப்சிசி யூனிட்டுகள்
பயன்படுத்தும் முறை: பால் பாதார்த்தம்/பானம் சாப்பிடும் முன்னர் அல்லது ஒரு வாய் சாப்பிட்டவுடன் 1-2 மாத்திரைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். விழுங்குவதற்கு முன்னர் மாத்திரையை முழுவதும் சுவைத்து முடிக்க வேண்டும். ஒருவேளை 20 முதல் 45 நிமிட நேரத்திற்குள் மறுபடியும் பால் பொருள்களுள்ள பதார்த்தம் / பானம் சாப்பிடுவதாக இருந்தால், கூடுதலாக ஒரு மாத்திரை போட்டுக்கொள்ள வேண்டும். மறந்துவிட்டிருந்தால், நினைவு வந்தவுடன் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.


