பின் மாலை மற்றும் இரவு நேரத்தில் பச்சிளங்குழந்தைகள் விடாமல் அழுவதும் சமாதானமாகாமல் தொல்லைப்படுத்துவதும் மிகச் சாதாரணமாக நிகழ்வதுண்டு. சிறு குழந்தைகள் வயிற்று வலியால் அழும்போது கால்களை இழுத்து வயிற்றுடன் சேர்த்துக்கொள்ளும்.
ஒரு சில குழந்தைகள் வயிற்றுவலியால் துன்பப்படுவதற்கு லாக்டேஸ் என்ஜைம் குறைபாடு ஒரு முக்கிய காரணியாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பச்சிளங்குழந்தைகள் முதிர்வடையாத செரிமான அமைப்புடன் பிறந்திருப்பதால், அவர்கள் குடிக்கும் பாலிலுள்ள லாக்டோஸ் செரிமானமாவதற்கு போதுமான லாக்டேஸ் என்ஜைம் அவர்களால் உற்பத்தி செய்ய இயலவில்லை என்று இதற்கு காரணம் கற்பிக்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், தாய்ப்பால் குடித்து முடித்ததும் அல்லது பால் பதார்த்தங்களான சீஸ் மற்றும் தயிர் சேர்ந்த திட உணவு பொருட்களை சாப்பிட்டிருந்தால் சாப்பிட்ட 30 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரத்திற்குள் அவன் / அவளுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, உப்புசம் அல்லது வாயு உபாதை போன்றவை தோன்றும்.
பச்சிளங்குழந்தைகளின் வயிற்றுவலி மற்றும் லாக்டோஸ் ஒவ்வாமை பிரச்சனைக்கு இயற்கை முறையில் பாதுகாப்பான நிவாரணம் அளிக்கும் யாமூ சொட்டு மருந்து (லாக்டேஸ் என்ஜைம் சொட்டு மருந்து) இந்தியாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இது லாக்டோஸை சிதைக்கும் என்பதால் லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகள் தொல்லைகளிலிருந்து சிறப்பான நிவாரணம் அளிக்கும்.
லாக்டேஸ் என்ஜைம் சொட்டு மருந்து
லாக்டேஸ் என்ஜைம் சொட்டு மருந்து ஒரு துணை உணவுப் பொருளாக செயல்பட்டு பால் பதார்த்தங்கள் எளிதாக செரிமானமாவதற்கு உதவும். பாலிலுள்ள முக்கிய சர்க்கரையான லாக்டோஸ் சிதைவுக்கு உதவும் லாக்டேஸ் சொட்டு மருந்தில் உள்ள லாஸ்டேஸ் என்ஜைம் அஸ்பர்கில்லஸ் ஒரைசே என்ற பூஞ்சையிலிருந்து பெறப்பட்டுள்ளது
சேர்மானம்: ஒவ்வொரு மில்லி யாமூ சொட்டு மருந்தில் அடங்கியிருப்பவை: லாக்டேஸ் என்ஜைம்: 600 எஃப்சிசி யூனிட்டுகள்.
பயன்படுத்தும் முறை I (fதாய்ப்பால் அளிக்கும் போது): தாய்ப்பாலை சிறிது வெளியில் எடுத்து அதில் 4 முதல் 5 சொட்டுகள் யாமூ சொட்டு மருந்தைச் சேர்க்க வேண்டும் ஏனென்றால் ஒவ்வொரு முறை பாலூட்டும்போதும் முதலில் வரும் பாலில் தான் மிக அதிக அளவு லாக்டேஸ் உள்ளது. பின் ஒரு சில நிமிடங்கள் காத்திருந்து இந்த மருந்து கலந்த பாலை முதலில் குடிக்கச் செய்த பிறகு, தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டலாம்.
பயன்படுத்தும் முறை II (ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு): ஒவ்வொரு 50 மிலி வெதுவெதுப்பான (30℃ முதல் 40℃ வரை) பால் பொடியில் தயார் செய்த செயற்கை பால் அல்லது பசும்பாலுடன் 4 முதல் 5 சொட்டுகள் யாமூ சொட்டு மருந்தைச் சேர்த்து கலக்கவும். 30 நிமிட நேரம் காத்திருந்து அவ்வப்போது மருந்து பாலை குலுக்கி குழந்தைக்கு ஊட்டவும்.


