Choose Language:

பால் மற்றும் பால் பொருள்கள் (பொதுவாக பால்பொருட்கள் என்று சொல்லப்படும்) உடலில் செரிமானமாக கடினமாக இருக்கும் நிலைமையை இது குறிக்கும். உங்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்து நீங்கள் பால்பொருட்களை உண்டால், உங்களிடம் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி மற்றும் வாயு உபாதைகள் தோன்றும்.

 
Yamoo lactose intolerance intro

இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60 முதல் 70 சத விகித்தினரிடம் லாக்டோஸ் ஒவ்வாமை காணப்படுகிறது. இவர்களில் வட இந்தியர்களை விட ஆரோக்கியமான தென்னிந்தியர்களிடம் இது அதிகம் உள்ளது. தொன்றுதொட்டு பால்பண்ணை பராமரிப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆரிய வம்சத்தின் வழிவந்தவர்கள் என்று வட இந்தியர்கள் கருதப்படுவதால் இவர்கள் லாக்டோஸ் சகிப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது.

உலகளவில் ஐரோப்பிய மக்களிடம் லாக்டோஸ் கிரகிக்கும் பண்பு அதிகமாகக் காணப்படுகிறது. ஆப்ரிக்கா, ஆசியா, ஆப்ரிக்க அமெரிக்கா மக்களிடம் லாக்டோஸ் கிரகிக்கும் பண்பு குறைந்திருப்பதால், இவர்கள் வெகு எளிதாக இள வயதிலேயே லாக்டோஸ் ஒவ்வாமைக்கு உட்பட்டுவிடுகிறார்கள். வயது கூடும் போது உடல் கிரகிப்புத் திறன் படிப்படியாகக் குறைந்து விடும். முதிர் வயதில் இத் திறன் மிகவும் குறைந்திருக்கும்.

உடல் சிறுகுடல் போதுமான அளவில் லாக்டேஸ் எனப்படும் ஓர் என்ஜைம் பொருளை உற்பத்தி செய்ய இயலாத காரணத்தால் லாக்டோஸ் ஒவ்வாமை உருவாகிறது. லாக்டோஸ் (பால் பொருட்களிலுள்ள சர்க்கரை) சிதைவடைய அல்லது செரிமானமாக இந்த லாக்டேஸ் என்ஜைம் தேவைப்படுகிறது.

மனிதனுக்கு வயது கூடும் சமயத்தில் பொதுவாக லாக்டோஸ் ஒவ்வாமை வளர்ந்து கொண்டிருக்கும். பருவ வயதில் அல்லது ஆரம்ப முதிர்பருவத்தில் (30 முதல் 40 வயது) பலர் பாதிக்கப்பட்டு லாக்டோஸ் ஒவ்வாமை யுடன் வாழ ஆரம்பிக்கிறார்கள். பொதுவாகவே லாக்டோஸ் ஒவ்வாமை குணம் பரம்பரையாக குடும்பங்களில் காணப்படுகிறது. தொற்றுகள், கீமோதெரபி, பென்சிலின் எதிர்வினைகள், அறுவை சிகிச்சை, கர்ப்பம் போன்றவை அல்லது நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பால் பொருள்கள் பயன்படுத்தாமல் இருத்தல் காரணமாகவும் லாக்டோஸ் ஒவ்வாமை ஏற்படலாம். இத்துடன், ஒரு சில குறிப்பிட்ட இன மக்கள் மற்றவர்களை விட மிக அதிகம் லாக்டோஸ் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு சில அரிதான நிகழ்வுகளில், புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தைகளும் லாக்டோஸ் ஒவ்வாமையுடன் இருக்கிறார்கள். வழக்கமாக, பச்சிளங்குழந்தைகள் வளரும் காலத்தில் இந்த ஒவ்வாமையிலிருந்து காலப்போக்கில் விடுபட்டுக்கொள்கிறார்கள்.

 

பால் குடித்தவுடன் அல்லது பால் சம்பந்தப்பட்ட உணவுகளை உட்கொண்ட பிறகு தான் இந்த அறிகுறிகள் தோன்றும். அறிகுறிகளில் இவை அடங்கும்:

  • வயிற்று வலி
  • உப்புசம்
  • வயிற்று பொருமல்
  • வாயு
  • குமட்டல்
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
 

லாக்டேஸ் என்ஜைம் குறைபாட்டை கண்டறிதல்

  • ஹைட்ரஜன் (H2) சுவாச பரிசோதனை:வெளியேறும் மூச்சுக் காற்றில் ஹைட்ரஜன் (H2) இருப்பதை பரிசோதிப்பதும் குடல் பகுதியில் லாக்டோஸ் உற்பத்தி செய்யும் பேக்டீரியா இருப்பது மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். 50 கிராம் லாக்டோஸ் உட்கொண்ட பிறகு வெளியேறும் சுவாச காற்றில் ஹைட்ரொஜென் > 20 ppm (parts per million) இருப்பதை அளந்து உறுதி செய்து கொள்ளலாம்.
  • லாக்டோஸ் டாலரென்ஸ் டெஸ்ட் (LTT): இரத்த குளுகோஸ் அளவு அதிகரிக்காமல் அல்லது குறைவாக அதிகரித்தலை பரிசோதித்தல். 50 கிராம் லாக்டோஸ் பொருளை உட்கொண்ட 30 நிமிடங்களில் இரத்த குளுகோஸ் அளவு அதிகரிக்காமல் இருக்கும் இயல்பற்ற நிலைமை LTT சுட்டுக்காட்டுவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
  • மலத்தில் அமில பரிசோதனை : மாதிரி மலப் பரிசோதனையில் மலம் pH அளவுகளை அளந்து செரிமானமாகாமல் லாக்டோஸ் புளிப்பேறிய லாக்டிக் அமிலம் மற்றும் இதர பிற அமிலங்கள் இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • புதிய பரிசோதனைகள்:இரத்தம் அல்லது உமிழ்நீர் மரபியல் பரிசோதனை.

லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பதைக் கண்டறிதல்

  • லாக்டோஸ் சேலஞ்ச் டெஸ்ட் : வீட்டில் 500 மிலி பாலை (25 கிராம் லாக்டோஸ்) குடித்த பிறகு 1 முதல் 3 மணி நேரத்திற்கு பட்டினி கிடக்க வேண்டும். உங்களிடம் வயிற்றுவலி, வாயு, தசைபிடிப்பு, உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், உங்களுக்கு லாஸ்டோஸ் ஒவ்வாமை இருப்பதாக தெரிந்து கொள்ளலாம்
 

ஆரோக்கிய உணவில் பால் பொருள்களுக்கு முக்கிய இடமுண்டு. இதில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் A, B12 மற்றும் D உள்ளன. வளர்ந்தவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் தினசரி அளவு (RDA) கால்சியம் 700 மிகி.

மேக்னிசியம் மற்றும் ஜிங்க் உள்ளிட்ட பிற மினரல்களை உங்கள் உடல் கிரகிக்க லாக்டோஸ் முக்கியமாகத் தேவைப்படும். எலும்புகள் வலிமை மற்றிம் ஆரோக்கியத்திற்கு இந்த வைட்டமின்களும் மினரல்களும் அத்தியாவசியமானவை.

உங்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், வைட்டமின்கள் மற்றும் மினரல்களை RDA அளவில் பெற்றுக் கொண்டிருப்பது கடினமடையலாம். இதன் காரணமாக கீழேயுள்ள நிலைமைகளுக்கும் ஆளாக நேரிடலாம்.

  • ஆஸ்டியோபினியா, இது எலும்பு கனிம அடர்த்தி குறைவைக் குறிக்கும். ஆஸ்டியோபினியா நிலைமைக்கு சிகிச்சை பெறாவிட்டால் இது ஆஸ்டியோபொரோசிஸ் ஆக வளரும்.
  • ஆஸ்டியோபொரோசிஸ், இதனால் உங்கள் எலும்புகள் மெலிவடைந்து பலம் குறைந்திருக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் நிலைமையில் எலும்பு முறிவு மற்றும் எலும்பு சேதம் அபாயங்கள் அதிகரித்திருக்கும்.
  • ஊட்டக்குறைவு உங்கள் இயல்பு உடலியக்கங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளை நீங்கள் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து பெறவியலாத நிலைமையை இது குறிக்கும். ஊட்டக்குறைவு இருக்கும் போது உங்கள் காயங்கள் குணமடைய அதிக காலம் எடுக்கும், உடல் அயர்ச்சியும் மனச்சோர்வும் உங்களைத் தொல்லைப்படுத்தும்.
  • எடை குறைவு. அளவு கடந்து எடை இழக்கும் போது உடல்நலம் பாதிப்படையும், இதனால் ஆஸ்டியோபொரோசிஸ் நிலைமை உருவாகும்.

இல்லை. பால் மற்றும் பால் பொருள்களுக்கு எதிர்வினை (அலெர்ஜி) சிலரிடம் காணப்படுவதுண்டு. ஆனால், பால் பொருள்கள் ஒத்துக்கொள்ளாத விளைவுகளுக்கும் லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகளுக்கும் வித்தியாசம் உண்டு. அலெர்ஜி சமயங்களில் பால் சர்க்கரையை விட பால் புரதத்தை எதிர்த்து உடல் செயல்படுகிறது. அத்துடன், அலெர்ஜி என்பது தொற்றுகளை எதிர்த்து செயல்படும் நோய் தடுப்பாற்றல் சம்பந்தப்பட்டதாக இருக்கும், லாக்டோஸ் ஒவ்வாமை என்பது அவை போன்றது அல்ல.

ஆமாம். உங்களுக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். உங்களிடம் அவர் / அவள் பல கேள்விகளைக் கேட்டு, உங்களுக்கு வேறு பிரச்சனைகள் இல்லை என்பதை உறுதி செய்துகொள்வார்.

 

பெரும்பாலான சமயங்களில், லாக்டோஸ் அடங்கிய உணவு பொருட்களை குறைத்துக்கொள்வதும், அவற்றை சாப்பிடாமல் லாக்டோஸ் அல்லாத மாற்றுப்பொருள்களை எடுத்துக்கொள்வதையும் பலர் கடைபிடிப்பார்கள், ஆனால் பால் பொருள்களிலுள்ள முக்கியமான கால்சியம், மேக்னிசியம், பொட்டாசியம், புரதம் மற்றும் ரிபொஃபிளவின் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை போதுமான அளவில் பெறுவது இவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும். பெண்களைப் பொருத்த வரையில், கால்சியம் அவர்களுக்கு மிகவும் முக்கியமாகத் தேவைப்படும், அவர்கள் வலிமை பெற்று ஆஸ்டியோபொரோசிஸ் நிலைமையால் பாதிப்படையாமல் இருக்க இது முக்கியமாகத் தேவைப்படும். ஆகையால் பால் மற்றும் பால் பொருள்களைத் தவிர்த்திருப்பது முழுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயலாக இருக்க முடியாது.

லாக்டோஸ் இருக்கும் பதார்த்தங்களை குறைத்து உண்பது அல்லது உண்ணாமல் இருக்கும் வழக்கத்தில், உங்களுக்குத் தேவையான முக்கிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களைப் பெறாமல் இருப்பது போலாகும், அதனால் ஊட்டக்குறை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

உங்கள் சிறுகுடல் உற்பத்தி செய்யாத லாக்டேஸ் என்ஜைம் வழங்கும் லாக்டேஸ் மாற்றுப் பொருள் அடங்கிய லாக்டேஸ் என்ஜைம் மாத்திரைகள் அல்லது சொட்டு மருந்துகள் கட்டாயம் உங்கள் அறிகுறிகளைக் குறைத்து நீங்கள் உணவுடன் உட்கொள்ளும் லாக்டோஸ் எளிதாக செரிமானமாக உதவும். லாக்டோஸ் அடங்கிய உணவுகளைச் சாப்பிடுவதற்கு முன்பாக அல்லது பாலுடன் கலந்து சாப்பிடலாம். ஒவ்வொரு தயாரிப்பும் ஒவ்வொருவரிடம் வித்தியாசமாகச் செயல்படும் என்பதை இதில் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், லாக்டோஸ் பொருள்களை அதன் கடைசி துளி வரை இத் தயாரிப்புப் பொருள்கள் சிதைக்கும் என்று ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது, ஆகையால் என்ஜைம் குறைநிரப்பிகளை எடுத்துக்கொண்டிருக்கும் போதும் ஒரு சிலரிடம் சில அறிகுறிகள் தொடர்ந்திருக்க வாய்ப்புள்ளது என்பதையும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

லாக்டோஸ் ஒவ்வாமையை இயற்கை வழியில் பாதுகாப்பாக சமாளிக்க, யாமூ மாத்திரைகள் (லாக்டேஸ் என்ஜைம் சுவை மாத்திரைகள்) இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்படுகின்றன. உங்கள் லாக்டேஸ் ஒவ்வாமை அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெற இவை சிறப்பாக உதவும்.