Choose Language:

பின் மாலை மற்றும் இரவு நேரத்தில் பச்சிளங்குழந்தைகள் விடாமல் அழுவதும் சமாதானமாகாமல் தொல்லைப்படுத்துவதும் மிகச் சாதாரணமாக நிகழ்வதுண்டு. சிறு குழந்தைகள் வலியால் அழும்போது கால்களை இழுத்து வயிற்றுடன் சேர்த்துக்கொள்ளும்.

பெருங்குடல் வயிற்றுவலி அறிகுறிகள்

வழக்கமான வயிற்றுவலி அறிகுறிகளில் இவை அடங்கும்:
  • என்ன காரணம் என்று தெரியாமலேயே குழந்தை வெகு நேரத்திற்கு அழுது கொண்டிருக்கும், சமாதானப் படுத்தினாலும் அழுகை நிற்காது, ஒரு சில நேரங்களில் குழந்தை வீரிட்டு அலறும். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் குழந்தை அழ ஆரம்பிக்கும், பொதுவாக மதிய வேளை அல்லது முன் மாலைப் பொழுதுகளில், சாப்பிட்ட உடன் குழந்தை அழத் தொடங்கிவிடும்
  • குழந்தையிடம் வயிற்றில் வாயு அல்லது வயிற்றுப் பொருமல் அறிகுறிகள் தெரியும், குழந்தையின் வயிறு உப்பியிருக்கும், கடினமடையும். அழும் குழந்தை வயிற்று வலி காரணமாக கால்களை மார்பு நோக்கி இழுத்துக்கொள்ளும், கை விரல்களை இறுக்கமாக மூடிக்கொள்ளும், கை கால்கள் துவண்டு விடும் அல்லது வளைத்து வைத்துக்கொள்ளும்
  • குழந்தை அடிக்கடி முழித்துக்கொள்ளும், எரிச்சலடையும் அல்லது எளிதில் சமாதானமடையாது.

ஒரு சில குழந்தைகள் வயிற்றுவலியால் துண்பப்படுவதற்கு மாறுநிலை லாக்டேஸ் குறைபாடு ஒரு முக்கிய காரணியாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பச்சிளங்குழந்தைகள் முதிர்வடையாத செரிமான அமைப்புடன் பிறந்திருப்பதால், அவர்கள் குடிக்கும் பாலிலுள்ள லாக்டோஸ் செரிமானமாவதற்கு போதுமான லாக்டேஸ் என்ஜைம் அவர்களால் உற்பத்தி செய்ய இயலவில்லை என்று இதற்கு காரணம் கற்பிக்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், தாய்ப்பால் குடித்து முடித்ததும் அல்லது பால் பதார்த்தங்களான சீஸ் மற்றும் தயிர் சேர்ந்த திட உணவு பொருட்களை சாப்பிட்டிருந்தால் சாப்பிட்ட 30 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரத்திற்குள் அவன் / அவளுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, உப்புசம் அல்லது வாயு உபாதை போன்றவை தோன்றும்.

பச்சிளங்குழந்தைகளின் வயிற்றுவலி மற்றும் லாக்டோஸ் ஒவ்வாமை பிரச்சனைக்கு இயற்கை முறையில் பாதுகாப்பான நிவாரணம் அளிக்கும் யாமூ டிராப்ஸ் (லாக்டேஸ் என்ஜைம் சொட்டு மருந்து) இந்தியாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இது லாக்டோஸை சிதைக்கும் என்பதால் லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகள் தொல்லைகளிலிருந்து சிறப்பான நிவாரணம் அளிக்கும்

பச்ச்சிளம் குழந்தைகளின் வயிற்று வலிகளில் 70% லாக்டோஸ் சசர்க்கரை ஒவ்வாமையால் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன