• 1
  • 2
லாக்டோஸ் (பால்சர்க்கரை) ஒவ்வாமையை இயற்கை வழியில் பாதுகாப்பாக சமாளித்தல்

பால்சர்க்கரை ஒவ்வாமை (LI) உலகளவிலும், பால் உற்பத்தி நாடு என்று பெயர் பெற்ற இந்தியாவிலும் மிகப் பொதுவாகக் காணப்படுகிறது. இந்தியர்களில் மூன்றில் ஒரு பாகத்தை விட அதிகமானோரிடம் லாக்டேஸ் குறைபாடு உள்ளது.

வயிற்று குடலில் லாக்டேஸ் எனப்படும் ஓர் என்ஜைம் போதுமான அளவில் இல்லாத காரணத்தால் பால்சர்க்கரை எனப்படும் லாக்டோஸ் செரிமானம் ஆவதில்லை. லாக்டேஸ் குறைபாட்டினால் லாக்டோஸ் செரிமானம் ஆகாமல் லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகளான வயிற்று வலி, உப்புசம், வயிற்றுப் பொருமல், வாயு, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பல ஜிஐ (GI) பிரச்சனைகள் உருவாக ஆரம்பிக்கின்றன.

சில சமயங்களில், வழக்கமான பால் தயாரிப்புப் பதார்த்தங்களுடன், சமைக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் மற்றும் பானங்களிலும் (மறைந்திருக்கும் பால் பொருள்கள்) காணப்படுவதால், லாக்டோஸ் ஒவ்வாமை (LI) அறிகுறிகள் வெளிப்படுகின்றன. இந்த லாக்டோஸ் ஒவ்வமையை எதிர்த்து இயற்கை வழியில் பாதுகாப்பான முறையில் சமாளிக்க இந்தியாவில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்படும் யாமூ மாத்திரைகள் (வாயில் சுவைக்கக்கூடிய லாக்டேஸ் என்ஜைம் மாத்திரைகள்) லாக்டேஸை சிதைத்து லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

லாக்டேஸ் என்ஜைம் மாத்திரைகள்

உணவு குறை நிரப்பியாகச் செயல்படும் லாக்டேஸ் சூவபிள் டேப்லெட்ஸ் (சுவை மாத்திரைகள்) பால்பண்ணைப் பதார்த்தங்கள் இயற்கை வழியில் அதிகம் செரிமானமாக உதவுகின்றன. பாலிலுள்ள முக்கிய சர்க்கரையான லாக்டோஸ் சிதைவுக்கு உதவும் லாக்டேஸ் சுவை மாத்திரையிலுள்ள லாஸ்டேஸ் பூஞ்சணம், அஸ்பர்கில்லஸ் ஒரைசே ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.

சேர்மானம்:ஒவ்வொரு யாமூ சுவை மாத்திரையில் உள்ளவை:
லாக்டேஸ்: 4500 எஃப்சிசி யூனிட்டுகள்

பயன்படுத்தும் முறை: பால் பாதார்த்தம்/பானம் சாப்பிடும் முன்னர் அல்லது ஒரு வாய் சாப்பிட்டவுடன் 1-2 மாத்திரைகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். விழுங்குவதற்கு முன்னர் மாத்திரையை முழுவதும் சுவைத்து முடிக்க வேண்டும். ஒருவேளை 20 முதல் 45 நிமிட நேரத்திற்குள் மறுபடியும் பால் பொருள்களுள்ள பதார்த்தம் / பானம் சாப்பிடுவதாக இருந்தால், கூடுதலாக ஒரு மாத்திரை போட்டுக்கொள்ள வேண்டும். மறந்துவிட்டிருந்தால், நினைவு வந்தவுடன் அதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

100% சைவம்
அங்கீகரித்துள்ளது
பச்சிளங்குழந்தை வயிற்றுவலி மற்றும் லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகளுக்கு இயற்கை முறையில் பாதுகாப்பான நிவாரணம்

பின் மாலை மற்றும் இரவு நேரத்தில் பச்சிளங்குழந்தைகள் விடாமல் அழுவதும் சமாதானமாகாமல் தொல்லைப்படுவதும் மிகச் சாதாரணமாக நிகழ்வதுண்டு. சிறு குழந்தைகள் வலியால் அழும்போது கால்களை இழுத்து வயிற்றுடன் சேர்த்துக்கொள்ளும்.

ஒரு சில குழந்தைகள் வய்ற்றுவலியால் துண்பப்படுவதற்கு மாறுநிலை லாக்டேஸ் குறைபாடு ஒரு முக்கிய காரணியாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பச்சிளங்குழந்தைகள் முதிர்வடையாத செரிமான அமைப்புடன் பிறந்திருப்பதால், அவர்கள் குடிக்கும் பாலிலுள்ள லாக்டோஸ் செரிமானமாவதற்கு போதுமான லாக்டேஸ் என்ஜைம் அவர்களால் உற்பத்தி செய்ய இயலவில்லை என்று இதற்கு காரணம் கற்பிக்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு லாக்டோஸ் ஒவ்வாமை இருந்தால், தாய்ப்பால் குடித்து முடித்ததும் அல்லது திட உணவு சாப்பிட ஆரம்பித்திருந்தால் பால் பதார்த்தங்களான சீஸ் அல்லது தயிர் சேர்ந்தவை சாப்பிட்ட 30 நிமிடங்களிலிருந்து 2 மணி நேரத்திற்குள் அவன் / அவளுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, உப்புசம் அல்லது வாயு உபாதை போன்றவை தோன்றும்.

பச்சிளங்குழந்தைகளின் வயிற்றுவலி மற்றும் லாக்டோஸ் ஒவ்வாமை பிரச்சனைக்கு இயற்கை முறையில் பாதுகாப்பான நிவாரணம் அளிக்கும் யாமூ டிராப்ஸ் (லாக்டேஸ் என்ஜைம் சொட்டு மருந்து) இந்தியாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இது லாக்டோஸை சிதைக்கும் என்பதால் லாக்டோஸ் ஒவ்வாமை அறிகுறிகள் தொல்லைகளிலிருந்து சிறப்பான நிவாரணம் அளிக்கும்.

லாக்டேஸ் என்ஜைம் டிராப்ஸ்

லாக்டேஸ் என்ஜைம் சொட்டு மருந்து ஒரு துணை உணவுப் பொருளாக செயல்பட்டு பால் பதார்த்தங்கள் எளிதாக செரிமானமாவதற்கு உதவும். பாலிலுள்ள முக்கிய சர்க்கரையான லாக்டோஸ் சிதைவுக்கு உதவும் லாக்டேஸ் சொட்டு மருந்தில் உள்ள லாஸ்டேஸ் பூஞ்சணம், அஸ்பர்கில்லஸ் ஒரைசே ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.

சேர்மானம்: ஒவ்வொரு மிலி யாமூ சொட்டு மருந்தில் அடங்கியிருப்பவை:
லாக்டேஸ் என்ஜைம்: 600 எஃப்சிசி யூனிட்டுகள்.

பயன்படுத்தும் முறை I (fதாய்ப்பால் அளிக்கும் போது):
தாய்ப்பாலை சிறிது வெளியில் எடுத்து அதில் 4 முதல் 5 சொட்டுகள் யாமூ சொட்டு மருந்தைச் சேர்க்க வேண்டும். முதலில் வரும் பாலில் தான் மிக அதிக அளவு லாக்டேஸ் உள்ளது. ஒரு சில நிமிடங்கள் காத்திருந்து இந்த மருந்து கலந்த பாலை முதலில் குடிக்கச் செய்த பிறகு, தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டலாம்.
பயன்படுத்தும் முறை II (ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு): ஒவ்வொரு 50 மிலி வெதுவெதுப்பான (30℃ முதல் 40℃ வரை) குழந்தை ஃபார்முலா பாலுடன் 4 முதல் 5 சொட்டுகள் யாமூ சொட்டு மருந்தைச் சேர்த்து கலக்கவும். 30 நிமிட நேரம் காத்திருந்து அவ்வப்போது மருந்து பாலை குலுக்கி குழந்தைக்கு ஊட்டவும்.

100% சைவம்
அங்கீகரித்துள்ளது